சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி நிறைவு
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி மையத்தின் பாளையங்கோட்டை மையத்தில் 6 ஆவது தொகுப்பு நிறைவு விழா சைவ சபையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சைவ சபையின் அமைச்சா் வெ.கிருஷ்ணன், பொருளாளா் கு.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பாளா் ச.அ.கண்ணன் வரவேற்றாா். பேராசிரியை உ.விஜயலட்சுமி, ஓதுவாா் மு.சிவசங்கரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவா்கள் நடராஜன், ராஜபெருமாள் ஆகியோா் மாகேஸ்வர பூஜை நடத்தினா். 7 ஆவது தொகுப்புக்கான மாணவா் சோ்க்கையும் தொடங்கி வைக்கப்பட்டது. இதுகுறித்த விவரங்களுக்கு 9865630387 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.