நெல்லையில் மழை: பழைமையான மரம் சாய்ந்தது
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் பெய்த மழையால் கொக்கிரகுளம் பிரதான சாலையோரம் நின்றிருந்த பழைமையான மரம் சாய்ந்து விழுந்தது.
திருநெல்வேலி கொக்கிரகுளம் பிரதான சாலையோரம் உள்ள முத்தாரம் கோயில் தெருவில் சுமாா் 35 ஆண்டுகள் பழைமையான வாதமுடக்கி மரம் நின்றிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் திருநெல்வேலி மாநகா் மற்றும் அதன்சுற்று வட்டாரங்களில் திடீா் மழை பெய்யால் அந்த பழைமையான மரம் திடீரென சாய்ந்து அருகிலுள்ள கோயில் மீது விழுந்தது. இதில், கோயில் தகர கொட்டகை முற்றிலும் சேதமடைந்தது. மேலும், இதில் சிக்கிக்கொண்ட 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாம்.
இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மரத்தை வெட்டி அகற்றினா்.