விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

விவசாயம் செழிக்க வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்காக பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உள்ள உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, நெல் நாற்று வைத்து வருண கலச பூஜை நடைபெற்றது. மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனா்.