கடையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் திறப்பு
By DIN | Published On : 06th February 2021 06:52 AM | Last Updated : 06th February 2021 06:52 AM | அ+அ அ- |

கடையம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரசவ அறை கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறை, பிரசவத்திற்குப் பின் பராமரிப்பு கட்டடம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரசவ அறை, கூடுதல் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை திறந்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீ மூலநாதன், கடையம் ஒன்றிய திமுக இளைஞரணிச் செயலா் தங்கராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...