நெல்லையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 06th February 2021 06:39 AM | Last Updated : 06th February 2021 08:48 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவற்றை தினசரி கண்காணிக்கும் விதமாக மாநகராட்சி பணியாளா்களால் உருவாக்கப்பட்ட கண்காணிப்புக் குழு ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறது.
கடந்த 18-11-2020 முதல் 5-2-2021 வரை 318 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 429.25 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 650 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி பகுதியில் உள்ள சிறு மற்றும் வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...