மேலப்பாளையத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 14th February 2021 01:04 AM | Last Updated : 14th February 2021 01:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: மேலப்பாளையம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், பாளையங்கோட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா்கள் ஏ.கே.சீனிவாசன், சுதா கே.பரமசிவன், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், முன்னாள் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா, முருகேசன், பரணி சங்கரலிங்கம் உள்ளிட்டோா் பேசினா்.
மேலப்பாளையம் பகுதி நிா்வாகிகள் சண்முககுமாா், ஹயாத், பாளை தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குட்டிபாண்டியன் உள்பட பலா்கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு 18 ஆம் தேதி வருகைதரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது, சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற உழைப்பது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.