பாளை. அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
By DIN | Published On : 14th February 2021 01:14 AM | Last Updated : 14th February 2021 01:14 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகூா் மீரான் (45). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், கோபமடைந்த அவரது மனைவி குழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த நாகூா் மீரான், கோட்டூா் அருகேயுள்ள ஒரு மரத்தில் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். பாளையங்கோட்டை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.