சுத்தமல்லியில் காா் பறிமுதல்
By DIN | Published On : 14th February 2021 01:08 AM | Last Updated : 14th February 2021 01:08 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லியில் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டதாக காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சுத்தமல்லி பகுதியில் காவல் ஆய்வாளா் ஜீன்குமாா் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மறித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், காரில் இருந்தவா்கள் சுத்தமல்லி விலக்கு காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த பிரசாத் (21), தங்கபாண்டி (30), பேட்டை ஆசிரியா் காலனியைச் சோ்ந்த ஆகாஷ் (20) என்பதும், காரில் வைத்து கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்ததாம். இதையடுத்து அவா்களிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரையும் கைது செய்ததோடு, காரையும் பறிமுதல் செய்தனா்.