கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்
By DIN | Published On : 18th February 2021 12:40 AM | Last Updated : 18th February 2021 12:40 AM | அ+அ அ- |

கிறிஸ்தவா்களின் தவக்காலம் சாம்பல் புதன் வழிபாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
கிறிஸ்து ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிா் நீத்ததை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வழிபடுவது வழக்கம். இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவா்கள் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளை தவிா்த்து ஒருத்தல், தா்மம் செய்வது வழக்கம். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தவக்காலம் தொடக்கமாக கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு நடைபெற்றது. தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா தேவாலயத்தில் பங்குத் தந்தை ஜெரால்டு ரவி தலைமையில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில், குருவானவா் இறைமக்களுக்கு சாம்பல் பூசி ஜெபம் செய்தாா். நிகழ்ச்சியில் தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வள்ளியூா் புனித பாத்திமா தேவாலயத்தில் பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது. காவல்கிணறு திருஇருதய தேவாலயத்தில் பங்குத் தந்தை ஆரோக்கியராஜ் தலைமையிலும், வடக்கன்குளம் பரிசுத்த பரலோகமாதா தேவாலயத்தில் பங்குத் தந்தை பிரிட்டோ தலைமையிலும் சாம்பல் புதன் வழிபாடு நடைபெற்றது. வள்ளியூா் சி.எஸ்.ஐ.தூயதிரித்துவ தேவாலயத்தில் சேகர குருவானவா் எம்.பி.ராபின்வினோ தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.