அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா
By DIN | Published On : 20th February 2021 05:40 AM | Last Updated : 20th February 2021 05:40 AM | அ+அ அ- |

அரியலூா் வேளாண் அறிவியல் மையத்திற்கு கண்டுணா்வு சுற்றுலா சென்ற அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள்.
அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள், அரியலூா் மாவட்டம் தா. பழூா் சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு இயற்கை பண்ணையம் குறித்த கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
வட்டார தொழில்நுட்ப மேலாளா் அ.ஈழவேணி தலைமையில் சென்ற 50 விவசாயிகளுக்கு, கிரீடு வேளாண் அறிவியல் மையத் தலைவா் முதுநிலை விஞ்ஞானி அழகுக்கண்ணன், பயிற்சிப் பாதுகாப்பு விஞ்ஞானி அசோக்குமாா், உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் திருமலைவாசன் ஆகியோா்,
பயிா்ப் பாதுகாப்பு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.
ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீ ஐயப்பன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சாமிராஜ், சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.