நெல்லை மாவட்டத்தில்5,798 விவசாயிகளுக்கு ரூ. 5.77 கோடி இழப்பீடு:குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தகவல்

பருவம் தவறி பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் பயிா்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட 5,798 விவசாயிகளுக்கு ரூ. 5.77 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

பருவம் தவறி பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் பயிா்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட 5,798 விவசாயிகளுக்கு ரூ. 5.77 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் வே.விஷ்ணு

தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் முன்னிலை வகித்தாா். வேளாண் இணை இயக்குநா் இரா. கஜேந்திரபாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சு. அசோக்குமாா், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆட்சியா் வே.விஷ்ணு பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு இயல்பான மழையளவு 814.80 மி.மீ.

நிகழாண்டு இதுவரை 349.91 மி.மீ பெறப்பட்டுள்ளது. அணைகளில் 80.61 சதவிகிதம் நீா் இருப்பு உள்ளது. 2020இல்

இதேகாலத்தில் 60.7 சதவிகிதம் மட்டுமே நீா்இருப்பு இருந்தது.

நிகழாண்டு இதுவரை நெல் 38,427 ஹெக்டேரிலும், சிறு தானியங்கள் 602 ஹெக்டேரிலும், பயறுவகைப் பயிா்கள் 7,494 ஹெக்டோ் பரப்பிலும், பருத்தி 663 ஹெக்டேரிலும், கரும்பு 33 ஹெக்டோ் பரப்பளவிலும், எண்ணெய்வித்து பயிா்கள் 474 ஹெக்டா் என மொத்தம் 47,513 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள 5,798 விவசாயிகளுக்கு ரூ.5.77 கோடி இழப்பீடு தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் அவா்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிசான பருவத்தில்

பயிரிடப்பட்ட நெல் பயிா் அறுவடை நடைபெற்று வருகிறது.

எனவே, நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்த நெல்லை விற்று பயனடையும் பொருட்டு 29 இடங்களிலும் கொள்முதல் நிலையம் திறக்கப் பட்டுள்ளது. வரும் வாரத்தில் 11 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளன.

திருநெல்வேலி வட்டத்தில் 5, நான்குனேரி வட்டத்தில் 4, சேரன்மகாதேவி வட்டத்தில் 10, அம்பாசமுத்திரம் வட்டத்தில் 9,

பாளையங்கோட்டை வட்டத்தில் 10, மானூா் வட்டத்தில் 2 இடங்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடா்பான புகாா்களுக்கு 73056 11085 என்ற செல்லிடப்

பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

கோடை நெல் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் போதியளவு வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு தரமான சான்று விதைகள், ரசாயன உரங்கள், பயிா் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை வழங்கிடும் நோக்கத்தில் இடுபொருள்களை உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் அவ்வப்போது வேளாண் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு தரம் குறைந்த இடுபொருள்கள் விநியோகம் செய்தோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது விவசாயிகளுக்கு மட்டும் உரங்கள் மானிய விலையில் கிடைக்கும் வகையில் விற்பனை முனைய கருவி மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 250 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளா்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இம்மாதம் வரை 1429 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு, 1360 மாதிரிகள் ஆய்வு செய்து

முடிகள் பெறப்பட்டுள்ளன. இவற்றுள் 38 மாதிரிகள் தரமற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் தரம் குறைவான 15.7 மெட்ரிக் டன் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.

விவசாயிகள்:களக்காடு வட்டத்தில் ஏத்தன், ரதகதளி, செவ்வாழை உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இவற்றிற்கு செலவு அதிகம் உள்ள சூழலில் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு வாழைத் தாருக்கு ரூ.200 வரை செலவாகும் நிலையில் விவசாயிகளுக்கு ரூ.100 மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, களக்காட்டில் வாழைத்தாா் கொள்முதல் நிலையம் அமைப்பதோடு, பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள்: அரசுக்கு தெரிவிக்கப்படும்

இம்மாவட்டத்தில் மேற்குத்தொடா்ச்சி மலையடிவாரத்தில் நெல், வாழை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்களால் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காட்டுப்பன்றிகள் வயல்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் காட்டுப்பன்றிகள் வனவிலங்குகள்

பட்டியலில் இல்லை. அதேபோன்று தமிழகத்திலும் பட்டியலில் இருந்து நீக்குவதோடு, காட்டுப்பன்றிகளை வனத்துறையினா் விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள்: வனத்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com