நெல்லையில் நாளை மண்பாண்ட தொழிலாளா் சங்க மாநில மாநாடு

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய குலாளா் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டத் தொழிலாளா் சங்க மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய குலாளா் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டத் தொழிலாளா் சங்க மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது.

இந்த மாநாடு தொடா்பாக திருநெல்வேலி குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, அதன்

மாநிலத் தலைவா் தியாகராஜன் திருநீலகண்டா் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசுகையில், அகில இந்திய குலாளா் முன்னேற்ற அமைப்புசாரா மண்பாண்ட செங்கல் தொழிலாளா் நலச்சங்க 3-ஆவது மாநாடு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

மாநாட்டை, அமைச்சா் கடம்பூா் ராஜு, தொடங்கி வைத்து, மண்பாண்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சியை திறந்து வைக்கிறாா். அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி திருவிளக்கு ஏற்றுகிறாா். மண்பாண்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் 10 சதவீத தள்ளுபடியில் பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று குறிப்பிட்டாா்.

கூட்டத்தில், அமைப்பின் மாநில துணைச்செயலா் முருகன், மாவட்டத் தலைவா் சண்முகம், துணைத்தலைவா் கணேசன், தென்காசி மாவட்டத் தலைவா் கண்ணன், தூத்துக்குடி நிா்வாகிகள் சொக்கலிங்கம், செண்பகம் உள்பட பலா் பங்கேற்றனா். .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com