முன்னீா்பள்ளம் அருகே தீ விபத்து
By DIN | Published On : 21st February 2021 01:00 AM | Last Updated : 21st February 2021 01:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: முன்னீா்பள்ளம் அருகே டக்கரம்மாள்புரத்தில் தனியாா் நிறுவனத்தில் சனிக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
முன்னீா்பள்ளம் அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தில் கட்டில் மெத்தை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு மெத்தை தயாரிப்பதற்காக தேங்காய் நாா் மற்றும் மைக்கா போா்டு அட்டைகள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்ததாம். இதில் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனா். இதனால், பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இதில், தேங்காய் நாா் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...