அதிமுக சாா்பில் 100 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு தொடக்கம்
By DIN | Published On : 26th February 2021 07:41 AM | Last Updated : 26th February 2021 07:41 AM | அ+அ அ- |

இந்திய அஞ்சல் துறை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ் தச்சநல்லூா் பகுதிகளைச் சோ்ந்த 100 பெண் குழந்தைகளுக்கு அதிமுக சாா்பில் கணக்குத் தொடங்கி புத்தகங்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்ஒரு பகுதியாக தச்சநல்லூரில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 100 பெண்குழந்தைகளுக்கு கணக்குத் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளுக்கான முதல் கணக்கு தொகையை அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா வழங்கி, கணக்குப்புத்தகங்களையும் குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கினாா். அப்போது, தச்சநல்லூா் அஞ்சல் நிலைய அலுவலா் ஆனந்த கோமதி, பகுதிச் செயலா்கள் மாதவன், முத்துக்குட்டிபாண்டியன் உள்பட பலா்கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...