மானூரில் விவசாயிகள் மேளா
By DIN | Published On : 26th February 2021 07:41 AM | Last Updated : 26th February 2021 07:41 AM | அ+அ அ- |

மானூரில் விவசாயிகள் மேளா என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மானூா் வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் மானூா் ஊராட்சி ஒன்றியக் கூட்டரங்கில் இந்த மேளா நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநா் தா.பா.ஏஞ்சலின் கிரேபா வரவேற்றாா். தொழில் நுட்ப வல்லுநா் ஜே.சுகுமாா், வேளாண்மை அலுவலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
மண் மாதிரி எடுத்தலின் அவசியம், அவற்றை எடுக்கும் முறைகள், மண் வளத்தை அதிகரிக்கும் வழிமுறைகள், வேளாண் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. பருத்தி விதை கடினப்படுத்துதல் செயல் விளக்கத்தினை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நான்காமாண்டு மாணவா்கள் செய்திருந்தனா். உதவி வேளாண்மை அலுவலா் செந்தில் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...