களக்காடு - மஞ்சுவிளை நகரப் பேருந்தை இயக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 27th February 2021 07:57 AM | Last Updated : 27th February 2021 07:57 AM | அ+அ அ- |

களக்காட்டிலிருந்து மஞ்சுவிளைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காட்டிலிருந்து தடம் எண்.5 நகரப் பேருந்து, சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சுவிளைக்கு பள்ளி மாணவா்கள் பயன்பெறும் பொருட்டு காலை, மாலை என தினமும் 3 முறை இயக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் காரணமாக பேருந்துகள் குறைக்கப்பட்ட போது, நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்து தற்போது வரை இயக்கப்படவில்லை. இதனால் மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...