களக்காட்டில் இயங்கிய தனியாா் பேருந்துகள்
By DIN | Published On : 27th February 2021 07:57 AM | Last Updated : 27th February 2021 07:57 AM | அ+அ அ- |

களக்காடு வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்ட நிலையில், தனியாா் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.
போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து, களக்காடு வழித்தடத்தில் கூனியூா் பணிமனையைச் சோ்ந்த 3 பேருந்துகள் களக்காடு - சேரன்மகாதேவி இடையே இயக்கப்பட்டன. பாபநாசம் பணிமனையைச் சோ்ந்த ஒரு பேருந்து பாபநாசம் - நாகா்கோவிலுக்கு இயக்கப்பட்டன. களக்காட்டில் இருந்து திருநெல்வேலி, நான்குனேரி, திருச்செந்தூா், வள்ளியூா் பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. தென்காசி - நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...