அம்பையில் இந்து அமைப்பினா் திடீா் சாலை மறியல்

அம்பாசமுத்திரத்தில் அரசுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து இந்து அமைப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அம்பாசமுத்திரம் நகராட்சி ஊா்க்காடு பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான புறம்போக்கு மற்றும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச் சுவா் கட்டுவதாகவும், அதை தடுத்து பொதுப் பாதையையும், பொது புறம்போக்கு இடத்தையும் மீட்க வலியுறுத்தியும், குடிசை மாற்று வாரியம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குடியிருப்புகள் வழங்குவதில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், இலவச பட்டா விண்ணப்பிப்பவா்களுக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்தும் இந்துமுன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநிலச் செயலா் குற்றாலநாதா், மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன், பாஜக சேகா் பாண்டியன், பால்பாண்டி, வழக்குரைஞா் மூா்த்திஆகியோா் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பெண்கள் உள்பட 150 போ் திரண்டனா்.

பின்னா் கோரிக்கைகளுக்கு முறையாக அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்று கூறி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். திடீா் மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com