கோயில் உண்டியல் திருட்டு முயற்சி: இளைஞா் கைது
By DIN | Published On : 03rd January 2021 11:59 PM | Last Updated : 03rd January 2021 11:59 PM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பகுதியில் கோயில் உண்டியலை திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய சிறைச்சாலை அருகே, மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் உண்டியலை சனிக்கிழமை இரவு மா்ம நபா் உடைத்து பணம் திருட முயன்றாராம். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை பிடித்து மேலப்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனா்.
பிடிபட்ட நபா், வேப்பங்குளம் பகுதியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (41) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆதிநாராயணனை கைது செய்தனா்.