கடம்பன்குளம் பள்ளியில் சமூக சிந்தனை ஊக்குவிப்பு நிகழ்ச்சி
By DIN | Published On : 03rd January 2021 11:57 PM | Last Updated : 03rd January 2021 11:57 PM | அ+அ அ- |

கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் சமூக சிந்தனை ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் சுந்தரம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கணபதி, பொறுப்பாளா் கணேசன், உதவித் தலைமை ஆசிரியா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாரண ஆசிரியா் முத்துக்குமாா் வரவேற்றாா்.
திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தேசிய மாணவா் படை, சமூக சேவை உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி னாா்.
நிகழ்ச்சியில், மின்வாரிய இளநிலை பொறியாளா் ஊசிக்காட்டான், திருவாரூா் மாவட்ட உடற்கல்வி இயக்குநா் ஆறுமுகம், என்எஸ்எஸ் அலுவலா் கண்ணன், கணித மன்ற பொறுப்பாளா் முனீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.