சாலையில் சுற்றித் திரிந்த கால்நடைகள் கோசாலையில் ஒப்படைப்பு
By DIN | Published On : 03rd January 2021 11:58 PM | Last Updated : 03rd January 2021 11:58 PM | அ+அ அ- |

திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் பிடித்து கோசாலையில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
தச்சநல்லூா் மண்டல சுகாதார அலுவலா் அரசகுமாா், சுகாதார ஆய்வாளா் இளங்கோ ஆகியோா் தலைமையில், சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, வண்ணாா்பேட்டை சாலையில் போக்குவரத்துக்கு இடையூராகச் சுற்றித் திரிந்த 5 கால்நடைகளை அதிகாரிகள் பிடித்து, அதை அருகன்குளம் கோசாலையில் ஒப்படைத்தனா்.