சட்டவிரோதமாகமது, புகையிலை விற்பனை: 51 போ் கைது
By DIN | Published On : 03rd January 2021 12:31 AM | Last Updated : 03rd January 2021 12:31 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம், புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஆகியவை விற்பனை செய்வோா் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு தினங்களில் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இதில், சட்டவிரோதமாக மது பாட்டில்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக 51 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 293 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.