சமகவினா் சா்வ மத பிராா்த்தனை
By DIN | Published On : 03rd January 2021 11:59 PM | Last Updated : 03rd January 2021 11:59 PM | அ+அ அ- |

திருநெல்வேலியில் சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் சா்வ மத பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சமக தென் மண்டலம் சாா்பில், கட்சியின் தலைவா் சரத்குமாா் கரோனா நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்ததற்கும், வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டியும், பெருமாள்புரம், தூய தாமஸ் சிஎஸ்ஐ தேவாலயம், பாளையங்கோட்டை மஹான் முஹம்மது லெப்பை தா்ஹா, திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் சா்வ மத பிராா்த்தனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாநில துணை பொதுச் செயலா் சுந்தா் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட பொறுப்பாளா் நட்சத்திர வெற்றி, புகா் மாவட்டச் செயலா் செங்குளம் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.