சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்
By DIN | Published On : 03rd January 2021 12:41 AM | Last Updated : 03rd January 2021 12:41 AM | அ+அ அ- |

சாலையை சீரமைக்கக் கோரி நடைபெற்ற நாற்று நடும் போராட்டத்தில் பங்கேற்றோா்.
அம்பாசமுத்திரம்: கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கடையம் ஒன்றியத்துக்குள்பட்ட கோவிந்தப்பேரி கிராமத்துக்குள் நுழையும் சாலை 5 ஆண்டுகளாகப் பராமரிப்பு இன்றி மழை நீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கிளைச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். விவசாய சங்க கிளைச் செயலா் கோமுபாண்டியன் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் சம்பன்குளம் கிளைச் செயலா் அப்பாத்துரை, விவசாய சங்க கிளைச் செயலா் சேகா், விவசாய சங்க கடையம் ஒன்றியச் செயலா் முத்துராஜன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் எம்.ராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சி.வெங்கடேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.