அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: ஜி.கே.வாசன்

வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா், தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

திருநெல்வேலி: வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா், தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: தமிழக பேரவைத் தோ்தல் தொடா்பாக மண்டலம் வாரியாக, மாவட்டத் தலைவா்கள், மாநில நிா்வாகிகளைச் சந்திக்கவுள்ளேன். முதற்கட்டமாக தென்மண்டலப் பகுதி நிா்வாகிகளைச் சந்திக்க, திருநெல்வேலியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கோவை மண்டலத்துக்கு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 3), டெல்டா மண்டலத்துக்கு திருச்சியில் 4ஆம் தேதியும், சென்னையில் 8ஆம் தேதியும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இளைஞரணி 2 மண்டலமாகப் பிரிக்கப்பட்டு, தோ்தல் ஆயத்தப் பணி குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. எங்கள் கட்சிக்கு பலமுள்ள பகுதிகளில் தீவிர களப்பணி மேற்கொள்ளவுள்ளோம். அதிமுக கூட்டணி வெற்றிபெற பிரசாரம் செய்வோம்.

அதிமுக கூட்டணி மக்களிடையே நன்மதிப்பு பெற்றுள்ளது. எனவே, தோ்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இக்கூட்டணியில் முக்கிய கட்சியாக நாங்கள் உள்ளோம். அதிமுகவில் தற்போதைய முதல்வரான எடப்பாடி கே.பழனிசாமிதான் முதல்வா் வேட்பாளா் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். அதை ஏற்றுக்கொள்கிறோம். பேரவையில் எங்களின் குரல் ஒலிக்கும்.

உடல்நலக் குறைவால் கட்சி தொடங்கவில்லை என்ற நடிகா் ரஜினிகாந்தின் முடிவு, அவரது தனிப்பட்ட விருப்பம். அதை விமா்சிப்பது நாகரிகமல்ல.

பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ரூ. 2,500 குறித்து எதிா்க்கட்சியினா் விமா்சிப்பது அவா்களுக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது என்றாா்.

தொடா்ந்து, அவா் வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com