பி.எச். பாண்டியன் மணி மண்டபம் இன்று திறப்பு
By DIN | Published On : 04th January 2021 12:04 AM | Last Updated : 04th January 2021 12:04 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவி அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் பி.எச். பாண்டியன் மணி மண்டப திறப்பு விழா திங்கள்கிழமை (ஜன. 4) நடைபெறுகிறது.
அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கிய காலத்திலிருந்து அவருடன் பயணித்தவா் பி.எச். பாண்டியன். 1945 பிப். 27 இல் பிறந்த இவா், சட்டப் பேரவை உறுப்பினராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்தாா். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவா்களில் முதன்மையானவராக இருந்த பி.எச்.பாண்டியன் 2020 ஜன. 4 ஆம் தேதி காலமானாா்.
அவரது சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகிலுள்ள கோவிந்தப்பேரியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை திறந்து வைக்கின்றனா்.