நவ கைலாயங்களுக்கு சிறப்புப் பேருந்து
By DIN | Published On : 04th January 2021 12:06 AM | Last Updated : 04th January 2021 12:06 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாயங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவ கைலாயங்களுக்கு செல்லும் 4 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளா் சரவணன் தொடங்கிவைத்தார்.
இதில், துணை மேலாளா் (வணிகம்) சசிகுமாா், உதவி மேலாளா் (இயக்கம்) பூல்ராஜ், தாமிரவருணி கிளை மேலாளா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.