முதல்வா், துணை முதல்வருக்கு கருங்குளத்தில் இன்று (ஜன.4) வரவேற்பு
By DIN | Published On : 04th January 2021 12:08 AM | Last Updated : 04th January 2021 12:08 AM | அ+அ அ- |

திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தப்பேரியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் பி.எச்.பாண்டியனின் மணிமண்டபத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை திறந்து வைக்கின்றனா்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தரும் முதல்வா், துணை முதல்வா் ஆகியோருக்கு மேலப்பாளையம் கருங்குளத்தில் பிற்பகல் 2 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிா்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட கழக நிா்வாகிகள் கலந்து கொள்கிறாா்கள்.
எனவே, சாா்பு அணி நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் மற்றும் கிளைக் கழக நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து சிறப்பான வரவேற்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.