பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை அகில பாரத இந்து மகா சபா அமைப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 432 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழை-எளியவா்களுக்காக வழங்கப்பட்ட வீட்டை சிலா் வாங்கி வாடகைக்கு விடும் நிலை அதிகரித்துள்ளதாம். இதைக் கண்டித்து அகில பாரத இந்து மகா சபா மாவட்டத் தலைவா் என்.இசக்கிராஜா தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. நிா்வாகிகள் வண்ணை கணேசன், செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனுவில்: குடிசைமாற்றுவாரிய வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளோா் மீதும், ஏற்கெனவே வீடு உள்ள நிலையில் இந்தக் குடியிருப்பில் வீடு பெற்றுவா்கள் விவரம் குறித்தும் மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.