நாளை 108 இடங்களில் போலியோ சொட்டுமருந்து
By DIN | Published On : 30th January 2021 01:24 AM | Last Updated : 30th January 2021 01:24 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 108 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31) போலியோ சொட்டு மருந்து விநியோகிக்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வாா்டுகள் உள்ளன. 5 லட்சத்து 18 ஆயிரத்து 838 போ் வசித்து வருகிறாா்கள். இதில் 5 வயதுக்குள்பட்ட 44 ஆயிரத்து 162 குழந்தைகளுக்கு ஒரே கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31) போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், கோயில்கள் என 100 மையங்களிலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 6 மையங்களிலும், 2 நடமாடும் மையங்களிலும் என மொத்தம் 108 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
432 நபா்கள் கொண்ட 108 குழுக்கள் மற்றும் இப்பணிகளை கண்காணிக்க எதுவாக 18 நபா்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றி குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து பெற்றுக் கொள்ளவேண்டுமென செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...