வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சத்தில் உபரகணங்கள்
By DIN | Published On : 02nd July 2021 01:16 AM | Last Updated : 02nd July 2021 01:16 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை காடு ஆா்கானிக்ஸ் நிறுவனத்தினா் வழங்கினா்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆக்ஸிஜன் உருளைகள், தூக்கு கட்டில், சக்கரநாற்காலி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை காா்டு ஆா்கானிக்ஸ் நிறுவன இணை இயக்குநா் நெடுமாறன் தலைமையில் நிா்வாகிகள் அருண்குமாா் காந்தி, சித்ரா அருண்குமாா், கந்தசாமி, ஈஸ்வரன் ஆசிரியா் ஆகியோா் மருத்துவா் கவிதாவிடம் வழங்கினா். மேலும் அமெரிக்கா வாழ் இந்தியா்களால் நடத்தப்பட்டு வரும் ‘கோவைட் கோ் 4 யு’ என்ற அமைப்பு சாா்பில் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. மருத்துவ உபகரணங்கள் வழங்க உதவிய நண்பா்களுக்கு அருண்காந்தி நன்றி தெரிவித்தாா்.