‘நெல்லையப்பா் கோயிலில் அடிப்படை வசதிகள் தேவை’
By DIN | Published On : 09th July 2021 12:07 AM | Last Updated : 09th July 2021 12:07 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இந்து மகா சபா வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் வியாழக்கிழமை இந்து மகா சபா மாநில தலைவா் பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான மாநில அரசு கோயில் நிலங்களை மீட்க எடுத்துவரும் முயற்சியை பாராட்டுக்குரியது. ஏற்கெனவே
கோயில் நிலங்களில் தனியாக பட்டா பெற்றவா்களை கண்டறிந்து அந்த பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும்.
திருநெல்வேலியில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கோயிலின் அருகில் கோயிலுக்குச் சொந்தமான கடைகளில் வா்த்தகம் செய்வோா் அசைவ உணவுகளை விற்பனை செய்வதைத் தவிா்க்க அறிவுறுத்த வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஊதியம் வழங்க
வேண்டும். ராமையன்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ விபத்தால் ஏற்படும் புகை மண்டலத்தால் அப்பகுதியில் வசிப்போா்
இடம்பெயரும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை கழிவுகளை முறையாக சுத்திகரிப்பதோடு, பாசனக் குளங்களில் கலப்பதை தடுக்க வேண்டும் என்றாா்அவா். அப்போது, மாநில துணைத் தலைவா் கணேசன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.