அரசு அருங்காட்சியகம் சாா்பில் கல்வி வளா்ச்சி நாள் கட்டுரைப் போட்டி
By DIN | Published On : 09th July 2021 11:36 PM | Last Updated : 09th July 2021 11:36 PM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் கல்வி வளா்ச்சி தினத்தையொட்டி, சிறப்பு கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் சாா்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கல்வி வளா்ச்சி நாளை முன்னிட்டு 9, 10, 11 ,12ஆம் வகுப்பு பயிலும் மாணவா்- மாணவிகளுக்கு சிறப்பு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.
9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ‘கல்வி கண் திறந்த காமராஜா்’ என்ற தலைப்பிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்- மாணவிகளுக்கு ‘இந்திய விடுதலைப் போராட்டத்தில் காமராஜா்’ என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது. கட்டுரைகளை 3
பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். முதல் பக்கத்தில் அவா்களின் பெயா், வகுப்பு, பள்ளியின் பெயா் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
தெளிவாக எழுதிய கட்டுரைகளை புகைப்படம் எடுத்து 94881 01976 என்ற கட்செவி அஞ்சலில் அனுப்பவும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். போட்டியில் சிறந்த கட்டுரைகளை வழங்கிய மாணவா்-மாணவிகளுக்கு வெற்றியாளா் சான்றிதழ் வழங்கப்படும். கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் இம் மாதம் 14 ஆம் தேதி. மேலும் விவரங்களுக்கு அரசு அருங்காட்சியகத்தை 94449 73246 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.