கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்திற்கு கடனுதவித் திட்டம்
By DIN | Published On : 09th July 2021 12:04 AM | Last Updated : 09th July 2021 12:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா்,
சீா்மரபினா் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கடனுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார வளா்ச்சிக் கழகம் ‘ஸ்மைல்’ (நஙஐகஉ-நன்ல்ல்ா்ழ்ற் ச்ா்ழ் ஙஹழ்ஞ்ண்ய்ஹப்ண்க்ஷ்ங்க் ஐய்க்ண்ஸ்ண்க்ன்ஹப்ள் ச்ா்ழ் கண்ஸ்ங்ப்ண்ட்ா்ா்க்ள் ஹய்க் உய்ற்ங்ழ்ல்ழ்ண்ள்ங்) என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் கரோனா பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபா் உயிரிழந்திருப்பின் அவா்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கடனுதவி வழங்கப்படும். அதன்படி,
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவா் கரோனாவால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.