பாளை.யில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th July 2021 12:05 AM | Last Updated : 09th July 2021 12:05 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய 3 தவணை பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும், அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் கொள்கையை திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கம், தபால்காரா்கள், பன்முகத்திறன் ஊழியா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, மூன்றாம் பிரிவு தபால் ஊழியா்கள் சங்கத் தலைவா் டி.அழகுமுத்து, தபால்காரா்கள் சங்கத் தலைவா் ஏ.சீனிவாச சொக்கலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.ஜேக்கப்ராஜ் தொடங்கி
வைத்தாா். இதில், தபால்காரா்கள் சங்க மாநில அமைப்புச் செயலா் புஷ்பாகரன், ஆா்எம்ஸ் ஓய்வூதியா் சங்க கோட்டச் செயலா் குருசாமி,
நிா்வாகிகள் கிருஷ்ணன், விஜயராஜா, வண்ணமுத்து, பிரபாகா், சங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.