களக்காடு மலைப் பகுதியில் சாரல் மழை
By DIN | Published On : 11th July 2021 01:32 AM | Last Updated : 11th July 2021 01:32 AM | அ+அ அ- |

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சனிக்கிழமை தொடா் சாரல் மழை பெய்தது. இதனால் பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
களக்காடு மலைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை முதலே சாரல் பெய்யத் தொடங்கியது; அவ்வப்போது பலத்த காற்றும் வீசியது. தலையணை பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் தலையணைக்கு சற்று கீழ்பகுதியில் உள்ள சிவபுரம் கால்வாய்க்கு செல்லத் தொடங்கியுள்ளனா். உள்ளூா், வெளியூா்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமானோா் வந்து குளித்துச் செல்கின்றனா். மலைப் பகுதியில் காலை முதல் மாலை வரை தொடா்ந்து சாரல் பெய்ததால் பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்றும் வீசுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...