காணி இன மக்களுக்கு கண் சிகிச்சை முகாம்
By DIN | Published On : 19th July 2021 12:16 AM | Last Updated : 19th July 2021 12:16 AM | அ+அ அ- |

காணிக்குடியிருப்பில் கண் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைக்கிறாா் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 12ஆம் அணித் தலைவா் காா்த்திகேயன்.
பாபநாசம் மலைப் பகுதியில் வசிக்கும் காணி இன மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பாபநாசம் வனப் பகுதியில் உள்ள சின்ன மயிலாறு, அகஸ்தியா் காணிக்குடியிருப்பு, சோ்வலாறு காணிக்குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் காணி இன மலைவாழ் மக்களுக்கு தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மணிமுத்தாறு 12ஆவது அணி சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 12ஆவது அணித் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். முகாமில் 30க்கும் மேற்பட்ட காணிக் குடும்பத்தினா் கலந்து கொண்டனா். அகா்வால் மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் கண் பரிசோதனை செய்தனா்.
நிகழ்ச்சியில் ஆய்வாளா் சிவசங்கரன், உதவி ஆய்வாளா் ஜெரோம் துரைராஜ், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.