நெல்லைக்கு ரயிலில் 2600 டன் ரேஷன் அரிசி வருகை
By DIN | Published On : 26th July 2021 12:50 AM | Last Updated : 26th July 2021 12:50 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசியில் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்க சரக்கு ரயில் மூலம் 2,600 டன் அரிசி ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது.
கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
இதையொடி, ஆந்திர மாநிலத்தில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் 2,600 டன் அரிசி திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக அரிசி மூட்டைகள் வந்துள்ளதாகவும், அவை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பயக25தஐஇஉ: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் ஏற்றி செல்லப்படும் அரிசி மூட்டைகள்.