கருப்புப் பூஞ்சை பாதிப்பு: நெல்லையில் பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 26th July 2021 05:38 AM | Last Updated : 26th July 2021 05:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மேலும் இந்நோய்க்கு, மருத்துவமனையில் 15 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.