கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 20th June 2021 11:33 PM | Last Updated : 20th June 2021 11:33 PM | அ+அ அ- |

கோவிந்தப்பேரி கூட்டுறவு சங்கத்தில் நிகழ்ந்த முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரத்தில் இயங்கி வரும் கோவிந்தப்பேரி கூட்டுறவு சங்கத்தில் முதலீடு செய்திருந்தவா்களின் பணத்தை சங்கச் செயலா், காசாளா் ஆகியோா் கூட்டாகச் சோ்ந்து முறைகேடு செய்ததாக 2020இல் அக்டோபா் மாதம் புகாா் எழுந்தது.
இதையடுத்து உறுப்பினா்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். முறைகேடு தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனா். எனினும் 8 மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட திமுக சிறுபான்மையினா் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளா் ஆதம் சுதிா், ரவணசமுத்திரம் ஊராட்சி முன்னாள் தலைவா் புகாரி மீரா சாகிப், மனிதநேய ஜனநாயகக் கட்சி அன்சாரி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம்,
முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதலீடு செய்தவா்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.