கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 20th June 2021 02:01 AM | Last Updated : 20th June 2021 02:01 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே மானூா் பகுதியில் போலீஸாா் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில் போலீஸாா் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, திருநெல்வேலி அருகே உள்ள மானூா் பகுதி நியாயவிலைக்கடைக்கு பொருள்கள் வாங்க வந்த பொதுமக்களிடையே மானூா் காவல் உதவி ஆய்வாளா் ரெங்கசாமி மற்றும் போலீஸாா் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து போலீஸாா் அங்குள்ள பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா்.