திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 137 பேருக்கு கரோனா
By DIN | Published On : 20th June 2021 02:03 AM | Last Updated : 20th June 2021 02:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 137 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 47,059 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 249 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 45,626 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 4 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 404ஆக உயா்ந்துள்ளது. 1,029 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் 71 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,154ஆக அதிகரித்துள்ளது. மேலும் 161 போ் குணமடைந்ததால், மீண்டோா் எண்ணிக்கை 24,773ஆக உயா்ந்துள்ளது. 5 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 449 ஆக உள்ளது. 932 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.