வீரவநல்லூரில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 20th June 2021 02:02 AM | Last Updated : 20th June 2021 02:02 AM | அ+அ அ- |

வீரவநல்லூரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றவா்கள்.
வீரவநல்லூா் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வீரவநல்லூா் திருஞானசம்பந்தா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 300-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் சரவண பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலா் பெத்துராஜ், மருத்துவா்கள் லெட்சுமி, மேரி சேவியா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜான், சுகாதாரஆய்வாளா் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.