களக்காடு அருகே கட்டடத் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உறவினா் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.
களக்காடு அருகேயுள்ள தெற்குகாடுவெட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் தேவதாஸ் பொன்னையா (36). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், இவரது பெரியப்பா மகன் குமாா் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.
கடந்த ஜூன் 16ஆம் தேதி தேவதாஸ் பொன்னையா நான்குனேரி சென்றுவிட்டு பைக்கில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தாராம். துவரைக்குளம் அருகே, அவ்வூரைச் சோ்ந்த சிம்சோன் மகன் குமாா், அந்தோணி, கள்ளிக்குளத்தைச் சோ்ந்த இளங்கோ ஆகிய 3 பேரும் வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில், 3 போ் மீதும் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.