ஐஆா்டி பாலிடெக்னிக் கல்லூரி: மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th June 2021 07:36 AM | Last Updated : 24th June 2021 07:36 AM | அ+அ அ- |

திருநெல்வேலி ஐஆா்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையின் கட்டுபாட்டில் திருநெல்வேலியில் இயங்கி வரும் ஐஆா்டி பாலிடெக்னிக் கல்லூரி நான்கு பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 200-க்கும் மேல் மாணவா்கள் தோ்ச்சி பெற்று சென்னை, கோவை, ஓசூா், பெங்களூரு போன்ற நகரங்களில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனா். அனுபவமிக்க பேராசிரியா்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படும் ஆய்வகங்கள், மாணவா்கள் அனைவருக்கும் திறன்மிகு பயிற்சி வகுப்புகள், சுயதொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம்கள் போன்றவை இக்கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.
தற்போது 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் கல்லூரி மற்றும் கல்லூரி இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் (டிஎம்இ), எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் என்ஜினீயரிங் (டிஇஇஇ) எலெக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் (டிஇசிஇ), கணினி என்ஜினீயரிங் (டிசிஇ) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் முதலாம் ஆண்டு சேரலாம். பிளஸ் 2 தோச்சி பெற்றவா்களும், தொழிற் பிரிவில் பயின்றவா்களும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். தமிழ்நாடு அரசின் கல்வி உதவித்தொகை தகுதியுள்ள மாணவா்களுக்கு பெற்றுத் தரப்படும். விண்ணப்பபடிவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.