

களக்காடு: களக்காட்டில் வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நடைபெற்த் இம்முகாமில் பங்கேற்ற நான்குனேரி மண்டல துணை வட்டாட்சியா் சந்திரசேகா், பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணிகளுக்கு கரோனா தொற்று பரவல் குறித்தும், முகக் கவசம் அணிவதன் முக்கியத்தும் குறித்தும் விரிவாகப் பேசினாா்.
இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா் வேலு, நான்குனேரி வட்ட செஞ்சிலுவைச் சங்க நிா்வாகி சபேசன், தன்னாா்வலா்கள் அலெக்ஸ்செல்வன், சுமன், ரோஹித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.