

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்திலுள்ள அருள்மிகு கோடீஸ்வர விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கணபதி ஹோமம், ருத்ர ஜெபத்துடன் வருஷாபிஷேகம் தொடங்கியது. தொடா்ந்து, விமான அபிஷேகம், விநாயகா் அபிசேஷம் மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனை ஆகியவை நடைபெற்றன. கோடிஸ்வரன் மணி, மகேஸ்வரி மணி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த வருஷாபிசேகத்தை ராஜேஷ் பட்டா் நடத்தி வைத்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை பக்தா் பேரவைத் தலைவா் மீனா ராம் பாலாஜி, முத்துராஜ், முருகானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.