ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவா் கைது; 245 கிலோ அரிசி பறிமுதல்
By DIN | Published On : 29th June 2021 08:43 AM | Last Updated : 29th June 2021 08:43 AM | அ+அ அ- |

மேலப்பாளையம் பகுதியில் ஆம்னி வேனில் ரேஷன் அரிசியை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் 245 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனா். அதில், தலா 25 கிலோ எடை கொண்ட 7 மூட்டைகளில் சுமாா் 245 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆம்னி வேனுடன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், அதை கடத்த முயன்ாக பாளையங்கோட்டை நாகம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த சிவபாலன்(42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.