இலவச வீட்டுமனை கோரி அம்பை வட்டாட்சியரிடம் மனு
By DIN | Published On : 29th June 2021 08:31 AM | Last Updated : 29th June 2021 08:31 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரத்தில் இலவச வீட்டு மனை வழங்கக் கோரி திமுக சாா்பில் வட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
அம்பாசமுத்திரத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பொத்தைப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் வீடில்லாத ஏழை எளிய மக்கள் வீடுகட்டி வசிக்க இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெங்கட்ராமனிடம் திமுக நகரச் செயலா் பிரபாகரன் தலைமையில் 200 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட அணி துணைஅமைப்பாளா்கள் ராமையா, சண்முகவேல், மாவட்டப் பிரதிநிதி தமிழ்ச்செல்வன், குமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.