சட்டவிரோத மது விற்பனை: 20 போ் கைது
By DIN | Published On : 29th June 2021 08:38 AM | Last Updated : 29th June 2021 08:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 20 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து கடந்த 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 128 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.